நீ உடுத்தும் உடைக்கு
பொருத்தமான உடை
நானும் உடுத்தினேன்.
நீ பேசும் மொழிகள்
உள்ளத்தில் வாங்கினேன்.
உன் கோரிக்கை நிறைவேற
நான் வேண்டினேன்.
உன் ஆயுள்வரை கூடவரும்
வாழ்க்கை துணையானேன்.
நீ இறக்கும் முன் நான்
இறக்கும் வரம் கேட்கிறேன்.
இது சுயநலம்தான்
ஏனென்றால் உன்னைதவிர
வேறெவரும் என்னை
பத்திரமாய் பார்த்துக்கொள்ளமாட்டார்கள்
என்ற நேசத்தினால்தான்.