
சூப்பர் சிங்கர் விருது கொடுத்தாகிவிட்டது. கொடுத்து முடித்த பிறகு அதன் பற்றிய சர்ச்சைகள் எதற்கு. நான் கூட சாய்சரணுக்கு தான் வாக்களித்தேன். சத்தியபிரகாசும் நன்றாக தான் பாடினார். குரல் வளம் மிக அருமையாக உள்ளது சத்தியபிரகாசுக்கு.
விருது வழங்கி முடித்தபின் அதைப் பற்றிய கருத்துக்கள் வெளியிடுவது தவறு என்று நினைக்கிறேன். அது விருது பெற்றவரின் மனதை பாதிக்கும் அல்லவா.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம்
என்பது இழுக்கு.
நடந்துமுடிந்த விசயங்களைப் பற்றிய கருத்துகள் கூறுவது தவறு என்பது என் எண்ணம்..
