Friday, August 19, 2011

செல்போன் வாங்க நான் பட்ட பாடு 6 வருடத்திற்கு முன்பு












எனக்கு 6 வருடம் முன்பு செல்போன் இல்லை. செல்போன் வாங்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால் எங்க அம்மாவும் அண்ணனும் செல்போன் எதற்கு வீண் செலவு என்று மறுத்தனர்.

நான் செல்போன் இருந்தால் தான் வேலை நியமனமான அழைப்புகள் வரும் அதனால் அனுமதியுங்கள்என்று கெஞ்சி கூத்தாடி செல்போன் வாங்கினேன்.

Sunday, August 14, 2011

பெரியவர்களும் சிறுமைத்தனங்களும்

அந்த ஆபிசில் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருந்தாள் வசுமதி. அந்த ஆபிசில் உயர்அதிகாரி பெயர் பாவனா. தான் என்ற அகங்காரம் அவளுக்கு. கொழுகொழுவென்றிருப்பாள். அவள் எப்போதும் வசுமதியை ஏதாவது ஒன்று கூறிக்கொண்டேயிருப்பாள். வசுமதிக்கு முன் சேர்ந்த நிர்மலாவை புகழ்வாள் வசுமதியை குறைகூறுவாள். எல்லாமே நிர்மலாவிற்குதான் தெரியும் என்பாள்.

அனைத்தையும் தாங்கிக்கொண்ட வசுமதி சுமை தாங்கியானாள்.
நிர்மலா வேலையனைத்தையும் வசுமதியின் தலையில் கட்டினாள்.

நல்ல பெயரையும் அதிக சம்பளத்தையும் அவள் வாங்கிக்கொண்டாள்.

சக பணியாளிணி ஒருத்தி கணினியில் ஒன்று தெரியவில்லை என்று வசுமதியை அழைத்தாள். அங்கே அந்த இடத்தில் கொழு கொழு பாவனா இருந்தாள். வசுமதி அந்த இடத்திற்கு போனவுடன் இவள் வேண்டாம். இவளுக்கு தெரியாது நிர்மலாவைக் கூப்பிடு என்று எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினாள்.

செய்த பார்த்த பின்பு தான் தெரியும் தெரியாது என்பதை முடிவு கட்ட வேண்டும். செய்ய விடுவதற்கு முன்னதாகவே தெரியாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.

இவர்கள் எல்லாம் உயர்அதிகாரிகளாம். மெத்த படித்த மேதாவிகளாம் என்னத்த சொல்ல..



கடன் பட்டார் நெஞ்சம் போல

யாரெல்லாம் கடன் பட்டவர்கள். நீங்கள் சொல்லலாம் நான் இதுவரைக்கும் யாருக்கும் எதற்கும் கடன் பட்டவனல்ல என்று.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் கடன் பட்டவர்களாகவே இருக்கிறோம். முதலில் நாம் கடன் படுவது நம்மைப்பெற்று வளர்த்த பெற்றோருக்கு. அவர்கள் நமக்காக எத்துணை எத்துணை தியாகங்கள் செய்து நம்மை ஆளாக்கி இருக்கிறார்கள்.

பட்ட கடனை திருப்பி அடைத்தலுக்கு பெயர் கடமை எனப்படுகிறது. பெற்றோருக்கு மட்டுமல்ல உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கடன் படுகிறோம். உதாரணத்திற்கு நாம் ஒரு வாகனத்தில் ஏறுகிறோம். நம்மை பத்திரமாக கொண்டு செல்லும் அந்த வாகன ஓட்டிக்கு நாம் கடன் பட்டுள்ளோம். அந்த கடனை நேரடியாக நாம் திருப்பிசெலுத்த முடியாது. அதாவது அவரை தேடிக்கண்டுபிடித்து அவருக்கு நாம் நண்மை செய்யமுடியாது. அதனால் அந்த கடனை எவ்வாறு நாம் அடைப்பது. இந்த சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மை செய்வதன் மூலம் அந்த கடனை நாம் அடைக்க வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம் நாம் கட்டணம் செலுத்தி அல்லவா வாகனத்தில் பிரயாணம் செய்தோம் என்று. நீங்கள் கொடுக்கும் 4 ரூபாய் கட்டணத்தில் ஒரு வாகனத்தை வாங்கிவிடமுடியுமா. அதனால் அதற்காக யார் யாரோ உழைத்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நாம் சமுதாயத்திற்கு கடன் பட்டிருக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.

Thursday, August 4, 2011

நேரம் போதவில்லை பதிவிடுவதற்கு

நேரம் போதவில்லை எனக்கு பதிவிடுவதர்ற்கு

நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்