Wednesday, November 16, 2011

நான் சம்பாதிக்கிறேன்

நான் பைசாலைவ் முலமாக சம்பாதிக்கிறேன். நீங்களும் சம்பாதிக்கலாம்.
விளம்பரங்களை பார்வை இடுவதற்காக அவர்கள் நமக்கு பணம் தருகிறார்கள் .

சேர்ந்த முன்று வாரங்களில் எட்டுநூறு சம்பாதித்து இருக்கிறேன்.

நீங்களும் இணைய பைசளிவே ல் சேருங்கள்

லிங்க் என்னுடைய வலை பூவில் இருக்கும்.

எனக்கு எதை பற்றி ஒரு மாத காலமாக தான் தெரியும்.
பின்வரும் லிங்க் கிளிக் பண்ணவும். சம்பாதிக்க ஆர்ரம்பிக்கவும்


http://www.PaisaLive.com/register.asp?3607393-6165560


இங்கேயும் கிளிக் செய்யலாம் சொடுக்குக

Friday, November 11, 2011

என் பாட்டி


என் பாட்டி ஒருவர் இருந்தார். இப்போது இல்லை. மிகவும் அன்பானவர். என் அம்மாவின் அம்மாவின் தங்கை அவர். எங்களை வளர்தேதே அவர் தான். அம்மாவின் அம்மா சிறுவயதில் அம்மாவின் சிறுவயதில் இறந்து விட்டார்.



நான் சிறு வயதாக இருந்தபோது உளுந்து வடை கடையில் வாங்கி தரும்படி கேட்டேன்.

சரி என்று கடைக்கு அழைத்து சென்றார்.

அதிக விலை என்று வாங்கி தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். கடைகரரையும் திட்டி விட்டார்.

அவர் உரில் இருக்கும் பொது நாங்கள் எதாவது வாங்கி கொண்டு போய் கொடுத்தாலும் எங்களுக்கே திரும்ப கொடுத்துவிடுவார் என் பாட்டி.


நாங்கள் கஷ்ட பட்ட காலத்தில் உடனிருந்தவர் நாங்கள் ஓரளவிற்கு நன்றாக இருந்த சமயத்தில் உயிரிடுன் இல்லை.


என் பாட்டிக்கு குழந்தைகள் இல்லை. என் அம்மாவைதான் அவர் வளர்த்தார்.

Saturday, October 1, 2011

சூப்பர் சிங்கரும் என் கண்ணோட்டமும்.


சூப்பர் சிங்கர் விருது கொடுத்தாகிவிட்டது. கொடுத்து முடித்த பிறகு அதன் பற்றிய சர்ச்சைகள் எதற்கு. நான் கூட சாய்சரணுக்கு தான் வாக்களித்தேன். சத்தியபிரகாசும் நன்றாக தான் பாடினார். குரல் வளம் மிக அருமையாக உள்ளது சத்தியபிரகாசுக்கு.

விருது வழங்கி முடித்தபின் அதைப் பற்றிய கருத்துக்கள் வெளியிடுவது தவறு என்று நினைக்கிறேன். அது விருது பெற்றவரின் மனதை பாதிக்கும் அல்லவா.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம்

என்பது இழுக்கு.

நடந்துமுடிந்த விசயங்களைப் பற்றிய கருத்துகள் கூறுவது தவறு என்பது என் எண்ணம்..

ஒவ்வொரு மாதிரி..

என்னுடன் ஒரு பெண் வேலை செய்கிறாள் பெயர் விசாகா(சிற்பல காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது).. அவள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறாள்.

மேலதிகாரிகளிடம் மிகுந்த அன்புடனும் பரிவுடனும் கனிவுடனும் நடந்து கொள்கிறாள். மற்றவர்களிடம் அதற்கு எதிராக நடந்து கொள்கிறாள்.

யார் என்ன வந்து கேட்டாலும் எரிந்து விழுவாள். சரியான பதில் அளிக்க மாட்டாள்.

அந்த பெண்ணால் மனவருத்தத்திற்கு ஆளானவர்கள் பலர்.

ஆனால் மேலதிகாரிகளிடம் நற்பெயரும் அதிகமான சம்பள உயர்வுகளும் பெற்றுவருகிறாள்.

சொல்லாத விசயத்தை மேலதிகாரிகள் முன்னிலையில் சொல்லிவிட்டேன் என்பாள். எல்லாவற்றிலும் நான்தான் சரியாக நடந்துகொள்கிறேன் மற்றவர்கள் தான் தவறு செய்வார்கள் என்ற கண்ணோட்டம் அவளுக்கு.

அவர்கள் மனம் வருந்துமே நாம் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாதே என்ற உணர்வு இல்லை அவளுக்கு.

வித்யாசமான பெண் விசாகா….

Monday, September 12, 2011

இணையத்தில் பணம் பார்க்க வழி

Hi ,

I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!

It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.

Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!

Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

http://www.PaisaLive.com/register.asp?3607393-6165560

PaisaLive - Get Paid to read emails

Friday, August 19, 2011

செல்போன் வாங்க நான் பட்ட பாடு 6 வருடத்திற்கு முன்பு












எனக்கு 6 வருடம் முன்பு செல்போன் இல்லை. செல்போன் வாங்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால் எங்க அம்மாவும் அண்ணனும் செல்போன் எதற்கு வீண் செலவு என்று மறுத்தனர்.

நான் செல்போன் இருந்தால் தான் வேலை நியமனமான அழைப்புகள் வரும் அதனால் அனுமதியுங்கள்என்று கெஞ்சி கூத்தாடி செல்போன் வாங்கினேன்.

Sunday, August 14, 2011

பெரியவர்களும் சிறுமைத்தனங்களும்

அந்த ஆபிசில் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருந்தாள் வசுமதி. அந்த ஆபிசில் உயர்அதிகாரி பெயர் பாவனா. தான் என்ற அகங்காரம் அவளுக்கு. கொழுகொழுவென்றிருப்பாள். அவள் எப்போதும் வசுமதியை ஏதாவது ஒன்று கூறிக்கொண்டேயிருப்பாள். வசுமதிக்கு முன் சேர்ந்த நிர்மலாவை புகழ்வாள் வசுமதியை குறைகூறுவாள். எல்லாமே நிர்மலாவிற்குதான் தெரியும் என்பாள்.

அனைத்தையும் தாங்கிக்கொண்ட வசுமதி சுமை தாங்கியானாள்.
நிர்மலா வேலையனைத்தையும் வசுமதியின் தலையில் கட்டினாள்.

நல்ல பெயரையும் அதிக சம்பளத்தையும் அவள் வாங்கிக்கொண்டாள்.

சக பணியாளிணி ஒருத்தி கணினியில் ஒன்று தெரியவில்லை என்று வசுமதியை அழைத்தாள். அங்கே அந்த இடத்தில் கொழு கொழு பாவனா இருந்தாள். வசுமதி அந்த இடத்திற்கு போனவுடன் இவள் வேண்டாம். இவளுக்கு தெரியாது நிர்மலாவைக் கூப்பிடு என்று எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினாள்.

செய்த பார்த்த பின்பு தான் தெரியும் தெரியாது என்பதை முடிவு கட்ட வேண்டும். செய்ய விடுவதற்கு முன்னதாகவே தெரியாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.

இவர்கள் எல்லாம் உயர்அதிகாரிகளாம். மெத்த படித்த மேதாவிகளாம் என்னத்த சொல்ல..



கடன் பட்டார் நெஞ்சம் போல

யாரெல்லாம் கடன் பட்டவர்கள். நீங்கள் சொல்லலாம் நான் இதுவரைக்கும் யாருக்கும் எதற்கும் கடன் பட்டவனல்ல என்று.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் கடன் பட்டவர்களாகவே இருக்கிறோம். முதலில் நாம் கடன் படுவது நம்மைப்பெற்று வளர்த்த பெற்றோருக்கு. அவர்கள் நமக்காக எத்துணை எத்துணை தியாகங்கள் செய்து நம்மை ஆளாக்கி இருக்கிறார்கள்.

பட்ட கடனை திருப்பி அடைத்தலுக்கு பெயர் கடமை எனப்படுகிறது. பெற்றோருக்கு மட்டுமல்ல உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கடன் படுகிறோம். உதாரணத்திற்கு நாம் ஒரு வாகனத்தில் ஏறுகிறோம். நம்மை பத்திரமாக கொண்டு செல்லும் அந்த வாகன ஓட்டிக்கு நாம் கடன் பட்டுள்ளோம். அந்த கடனை நேரடியாக நாம் திருப்பிசெலுத்த முடியாது. அதாவது அவரை தேடிக்கண்டுபிடித்து அவருக்கு நாம் நண்மை செய்யமுடியாது. அதனால் அந்த கடனை எவ்வாறு நாம் அடைப்பது. இந்த சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மை செய்வதன் மூலம் அந்த கடனை நாம் அடைக்க வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம் நாம் கட்டணம் செலுத்தி அல்லவா வாகனத்தில் பிரயாணம் செய்தோம் என்று. நீங்கள் கொடுக்கும் 4 ரூபாய் கட்டணத்தில் ஒரு வாகனத்தை வாங்கிவிடமுடியுமா. அதனால் அதற்காக யார் யாரோ உழைத்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நாம் சமுதாயத்திற்கு கடன் பட்டிருக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.

Thursday, August 4, 2011

நேரம் போதவில்லை பதிவிடுவதற்கு

நேரம் போதவில்லை எனக்கு பதிவிடுவதர்ற்கு

நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்

Saturday, July 2, 2011

துணை

நீ உடுத்தும் உடைக்கு
பொருத்தமான உடை
நானும் உடுத்தினேன்.

நீ பேசும் மொழிகள்
உள்ளத்தில் வாங்கினேன்.

உன் கோரிக்கை நிறைவேற
நான் வேண்டினேன்.

உன் ஆயுள்வரை கூடவரும்
வாழ்க்கை துணையானேன்.

நீ இறக்கும் முன் நான்
இறக்கும் வரம் கேட்கிறேன்.
இது சுயநலம்தான்
ஏனென்றால் உன்னைதவிர
வேறெவரும் என்னை
பத்திரமாய் பார்த்துக்கொள்ளமாட்டார்கள்
என்ற நேசத்தினால்தான்.