யாரெல்லாம் கடன் பட்டவர்கள். நீங்கள் சொல்லலாம் நான் இதுவரைக்கும் யாருக்கும் எதற்கும் கடன் பட்டவனல்ல என்று.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் கடன் பட்டவர்களாகவே இருக்கிறோம். முதலில் நாம் கடன் படுவது நம்மைப்பெற்று வளர்த்த பெற்றோருக்கு. அவர்கள் நமக்காக எத்துணை எத்துணை தியாகங்கள் செய்து நம்மை ஆளாக்கி இருக்கிறார்கள்.
பட்ட கடனை திருப்பி அடைத்தலுக்கு பெயர் கடமை எனப்படுகிறது. பெற்றோருக்கு மட்டுமல்ல உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கடன் படுகிறோம். உதாரணத்திற்கு நாம் ஒரு வாகனத்தில் ஏறுகிறோம். நம்மை பத்திரமாக கொண்டு செல்லும் அந்த வாகன ஓட்டிக்கு நாம் கடன் பட்டுள்ளோம். அந்த கடனை நேரடியாக நாம் திருப்பிசெலுத்த முடியாது. அதாவது அவரை தேடிக்கண்டுபிடித்து அவருக்கு நாம் நண்மை செய்யமுடியாது. அதனால் அந்த கடனை எவ்வாறு நாம் அடைப்பது. இந்த சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மை செய்வதன் மூலம் அந்த கடனை நாம் அடைக்க வேண்டும்.
நீங்கள் நினைக்கலாம் நாம் கட்டணம் செலுத்தி அல்லவா வாகனத்தில் பிரயாணம் செய்தோம் என்று. நீங்கள் கொடுக்கும் 4 ரூபாய் கட்டணத்தில் ஒரு வாகனத்தை வாங்கிவிடமுடியுமா. அதனால் அதற்காக யார் யாரோ உழைத்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நாம் சமுதாயத்திற்கு கடன் பட்டிருக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.
No comments:
Post a Comment