
தாம்பரம் சனடோரயும் உள்ளது தேசிய சித்த மருத்துவ நிறுவனம். நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். ஒரு மாதத்தில் நாற்பதாயிரம் பேர் வருகிறார்கள்.
நோய்கள் எல்லாம் நன்கு குணமாகின்றன.

நிறைய பிரிவில் தனித்தனி துறைகள் உள்ளன.
அங்கு நிறைய நல்ல விஷயங்கள் அடங்கிய பலகைகள் இருக்கும்.
முன்னாளில் சமைத்த கறி அமுது எனினும் உண்ணேன்.
அப்படி என்றால் முன்னாளில் சமைத்த சாப்பாட்டை அமுதாக இருந்தாலும் உண்ணகூடாது என்பது அதன் அர்த்தம்.
நடை பயிற்சி மிகவும் சிறந்தது என்று எழுதியிருக்கும்.
மிக மிக நல்ல விஷயங்கள் அங்கு உள்ளன.
உடல் நலமும் நன்றாக ஆகிறது.
நீங்களும் தேவைப்பட்டால் செல்லுங்கள். பயன் பெறுங்கள்.
சரியா.
முக்கிய விஷயம் என்ன என்றால் கட்டணம் எதுவும் கிடையாது. போகும் போது பாட்டில்கள் கொண்டு செல்லவேண்டும். மருந்து கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்.
செல்லுங்கள். வாழ்வில் வெல்லுங்கள்.
நன்றி
வணக்கம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
அன்புடன் மேகா
No comments:
Post a Comment