
நான் சனிகிழமை அன்று பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது நடத்துனர் ஒரு பெரியவரை (ஐம்பது வயதிருக்கும்) நூறு ரூபாய் வைத்து இருந்ததால் கிழே இறங்கும்படி கூறினார்.
நான் சில்லறை வைத்து இருந்ததால் என் மனது கேட்டகவில்லை. சரி நாம் கொடுத்து உதவுவோம் என்று அவருக்கு பதினைந்து ரூபாய் கொடுத்தேன்.
சரி திருப்பி தண்டு விடுவார் என்ற நம்பிக்கையினால் தான். ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா அவரிடம் பத்து ரூபாய் இருந்தது போல அதை மட்டும் என்னிடம் கொடுத்து விட்டு பஸ்ஸின் முற்பகுதியில் சென்று அமர்து கொண்டார்.
நான் கொடுக்கும் போதே சொன்னேன் திருப்பி தரவேண்டும் என்று சொன்னேன்.
ஆனால் அவர் தரவே இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை.
இரக்கத்தின் பயன் இந்து ரூபாய் நட்டம் .
இனிமேல் யாராவது கேட்டல் எனக்கு தர தோன்றுமா? நீங்களே சொலுங்கள் பார்க்கலாம்.
என்ன அனுபவம் பாருங்கள்.
தேவையா இது?
ReplyDelete